கிராமத்து சிற்றுந்து
இங்கு அங்கு என நகர முடியாதளவு
கூட்ட நெரிசல்
வெயிலின் காட்டம் குறைய வெள்ளரிக்காய் விற்பவரின் கூச்சல்
அழும் குழந்தையை சமாதனம் செய்யும் முயற்சியில் தாய்
"டிக்கெட் டிக்கெட்" என்ற கூக்குரலில் நடைப்பயணம் செய்யும் நடத்துனர்
இதற்கிடையில்
எவ்வித இடைஞ்சலுமின்றி
இருவர் மட்டும் நேசம் பரிமாறிக்கொண்டிருந்தனர்
தொலைக்காட்சிப் பெட்டியில்!!!