காதல் சாக்கடைக்குள் மூழ்கி விட்ட மூடர்களே...............


ஆதி காலம் முதல் உலகை
அழிக்க வந்த காமம்
இப்போது காதல் என்று
பெயரை மாற்றி கொண்டு
உலாவருகிறது

ஆதாமும் ஏவாளும் மூழ்கியது
காதலால் அல்ல
அவர்களுக்குள் ஏற்ப்பட்ட
காமத்தால்

இப்போது இளைய சமுதாயம்
மூழ்கி கொண்டிருப்பதும்
காதலில் அல்ல காமத்தில் தான்

எங்கெல்லாம்
காதல் புகுகிறதோ
அங்கெல்லாம் வெல்வது
காமம் மட்டும்தான்
காதல் அல்ல

உண்மையான காதல்
இவ்வுலகில் இல்லையடா
பெண்களின் பார்வைகள் பொய்யடா
ஆண்களின் பேச்சுகள் வஞ்சகமடா

உண்மை காதல்
இவ்வுலகில் இல்லையடா
அதை புரிந்தால்
இவ்வுலகை வென்று விடுவோம்
நாமடா

கொஞ்சம் சிந்தித்து பாரடா
உண்மைகள் உனக்கு புரியுமடா

இப்படிக்கு.....................

எழுதியவர் : நந்தி (25-Aug-11, 2:11 pm)
சேர்த்தது : nanthiselva
பார்வை : 464

மேலே