மழையே நான் உன் விரும்பி

நீ தொலைந்த நதியினில்
உனை மீட்க நான்
எங்கே போய்த் தேட..................💧

மின்னல் ஒளியில் நிர்வாணமாய்
வந்து விழுந்து மண்ணில்
மறைந்து பாதைத் தேட.............⚡

ஆகாயத் தேவதை கார்மேகக்
கூந்தலை அவிழ்த்து விட
மெல்லியக் காற்றைத் தேட.......☁️

கரத்த குரலோடு கவிதைபாடும்
தவளைவாயன் முகம் மலர்ந்து
உனை வானில்த் தேட.................🐸

வானம் பார்த்த பூமியெங்கும்
உனை சீண்டிப் பார்க்க
உழவன் கலப்பைத் தேட.............⛏️

நீயோ கடலைத் தேட
விரைய மாகுமே உன்
கொடை யெனும் நீர்.......................☔

எழுதியவர் : சூர்யா. மா (13-Dec-18, 1:12 pm)
சேர்த்தது : சூர்யா மா
பார்வை : 217

மேலே