அவள்

மங்கையொருத்தியைக் கண்டேன்
அழகிய தங்கப் பதுமையயைப்போல்
அவள் அழகில் மயங்கியதே என்னுள்ளம்,
மோகமுள் தைத்தது என் நெஞ்சை ,
காமமும் எறியதோ, என்னுடலில் என்
பார்வை அவளை விட்டு விலகாமல் ,
என் வயமில்லாது என் மனமும் அலைய ,
வஞ்சி அவள் என்னை நோக்கினாள்
சுவர்ணமாய் ஜொலித்தது அவள் தேகம் ,
அவள் பார்வையின் ஒளியோ
என் நெஞ்சில் இறங்கி என்னுள் எரியும்
காமத்தை எரித்ததுபோல் நான் உணர்ந்தேன்,
என்னை நான் உணர்ந்தேன் காமம் தீர,
அவ்வழகியை மீண்டும் நோக்க நான் தயங்க வெட்கத்தில்
அவள் மெல்லியதோர் புன்னகை தந்தாள்,
அது காதல் தந்ததோ அப்படித்தான் என்று
நான் நினைக்கின்றேன் .......ஒன்று மட்டும்
என் நெஞ்சில் திண்ணமாய் பதிவானது,
மங்கை அவள் அங்கத்தின் ஒளியும் பார்வையின் ஒளியும்,
என் நெஞ்சில் பாய்ந்து என்னை மாற்றியது
காமம் வேறு காதல் வேறு என்று எனக்கு
உணர்த்தியது மங்கையின் அங்கத்தில் இருந்து
ஓங்கி வந்து என்னுள் புகுந்த ஓர் ஒளி.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Dec-18, 11:56 am)
Tanglish : aval
பார்வை : 268

மேலே