மகளின் வருகை
என்னை கடந்து செல்லும்
எல்லா பேருந்துகளும்
சோகத்தையும்
இன்பத்தையும்
தாங்கித்தான் கடந்தன
எனக்கென்னவோ
அனைவர் முகத்திலும்
மகிழ்ச்சி ரேகைகள்
இழையோடுவதாக தெரிகிறது
என்னை விடுத்து
இன்னும் வரவில்லை
எனக்கான பேருந்து
மகளின் வருகை