தனிமை தரும் வலி

அன்று இரவு பௌர்ணமி என்பதால் நிலவின் அழகை ரசித்துகொண்டிருந்தான் வாசு...இரவு மணி 12 எட்டியபோதும் தூக்கம் வராமல் தவித்துக்கொண்டிருந்தான்...கொள்ளை அழகு கொண்டிருக்கும் அந்த பௌர்ணமி நிலவை பார்த்தும் அவனுக்கு எதே ஒருவித ஏக்கம் வந்ததால் தன் தூக்கத்தை இழந்து நின்று கொண்டிருந்தான்.தன் வாழ்நாளில் இன்பத்தை மட்டும் பார்த்தவனுக்கு அவள் தந்து சென்ற வலி அவனை பெரும் துன்பத்தை தந்தது.அவளுடன் இருந்த நாட்கள் அவன் தன்னை அடையாளம் காணவைத்தது அவனது வாழ்நாளில் எப்போதும் எதற்காகவும் இப்படி ஏங்கியதில்லை..அவளால் இன்று தன் கண்களில் நீர்வடிய நின்றிருக்கிறான்...இரவின் அமைதியும் நிலவின் அழகும் அவனின் நினைவுகளை இரண்டு ஆண்டுகள் பின்நோக்கி இழுத்து...

அன்று கல்லூரியின் முதல்நாள் என்பதால் அனைவரும் உற்சாகமாக வந்தனர்.இரண்டாம் ஆண்டு வெற்றிகரமாகமுடித்துவிட்டு மூன்றாம்ஆண்டை தொடங்க ஆவலாக வந்தான் வாசு.. உள்ளே வந்ததும் வாசு என்ற குரல் சத்தமாககேட்டது..குரல்கேட்டதும் திரும்பிபார்த்த வாசு தன் ஆருயிர் நண்பன் குரு நிற்பதை பார்த்தவன் சிறு புன்னகையுடன் குரு அருகே சென்றான்..குருவைபார்த்து நலம் விசாரித்துவிட்டு இருவரும் வகுப்புக்கு சென்றனர்..உள்ளே சென்று அமர்ந்ததும் வகுப்பு தொடங்கியது. வகுப்பு தொடங்கியி சில நிமிடத்தில் உள்ளே வரலாமா என்று ஒரு குரல் ஒலித்து. அந்த குரலை கேட்டு திரும்பிபார்த்தான் வாசு..அவளை கண்டு தன் இதயத்தை தொலைத்தவன் இன்று வரை இதயமில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறான்...

எழுதியவர் : ஜீவாரவி (19-Dec-18, 11:50 pm)
சேர்த்தது : ஜீவா ரவி
பார்வை : 420

மேலே