தமிழ் அவளை விட அழகு

என் காதலியிடம்
கண்டேன்...

காண்பவர் வியக்கும்
கண்ணழகு
கல் மூக்குத்தி அணிந்த
மூக்கழகு
ஜிமிக்கியில் ஜொலிக்கும்
செவியழகு
அசைத்தாலே இனிக்கும்
இதழழகு
நினைத்தாலே சிலிர்க்கும்
உடலழகு

இப்படி ஐம்புலன்களையும்
அழகால் அடக்கி ஆளும்

அவள் அழகை விட அழகு
இந்த அழகு கவிதையால்
தமிழ் அவளை விட அழகு..

எழுதியவர் : ஜெய் ரெட்டி (20-Dec-18, 7:52 am)
சேர்த்தது : ஜெய் ரெட்டி
பார்வை : 83

மேலே