அவள் அழகா தமிழ் அழகா

அவள் அழகா? இல்லை தமிழ் அழகா?

அவள் அழகா இல்லை தமிழ் அழகா என
கேட்டால்
அவள் தான் அழகு என்பேன்
சொப்பனத்தில்
இக்கனத்தில் தமிழ் தான் அழகு

அவள் சிரிப்பில் அழகு என்றால்
என் தமிழ் உச்சரிப்பதில் அழகு

அவள் கன்ன குழிக்குள் விழாத நான்
என் தமிழ் அன்னையின் மடியில்
விழுந்தேன்

சொப்பனதில் கண்டவள்
நேரில் வந்தால்
அவளும் அழகு தான் அவள் பெயர்
தமிழ் என்ற போது

எழுதியவர் : (20-Dec-18, 12:06 pm)
சேர்த்தது : Hari maran
பார்வை : 51

மேலே