காதல் தேன்கசியய

மீண்டும் பெய்யத்தொடங்கிய
மழையின் சிலதுளிகள்
என் உதடுகளின் மேல்பூச்சாக
மின்னிக்கொண்டிருந்ததை
அழுத்தமாக பதிவு செய்ய
மேலும் சில முத்தங்கள
இழக்கத்தான் வேண்டியிருந்தது
காதலிடம்!!!

*****************************************
உன் சுவாச சூட்டில்
கரைந்துவிட நானொன்றும்
சிறுதூறல் இல்லை
இந்த அந்திமக் காலத்தில்
உன்னை ஆழமாக உண்மையாக
அறிந்தவள் நான்தான் என்பதை
நீ என்னில் முழுவதுமாய்
நனைந்து மூழ்கி
முத்தெடுத்தால்தான்
நம்புவாயா என் காதலே!!!..........

எழுதியவர் : மேகலை (22-Dec-18, 8:33 pm)
சேர்த்தது : மேகலை
பார்வை : 254

மேலே