வெளிநாட்டு கணவன்
என்னவளே,
என்னுள் இருப்பவளே.
எண்ணம் எல்லாம் நிறைந்தவளே..
தவிக்கின்றேன் உன் தழுவல் இன்றி,
வெருக்கின்றேன் உன் முத்தமின்றி,
அழுகின்றேன் உன் அனைப்பின்றி,
அப்பா என்று குரல் கேட்கும்போதெல்லாம் ஆனந்தம்..
இருந்தும் அனைத்து முத்தம் இட முடியாத ஆதங்கம்...
உன் வேண்டுதல் என்னை இங்கு பாதுகாக்கிறது...
இறைவா நம்புகின்றேன் என் உயிர்களை அங்கே நீ பார்த்துக்கொள்வாய் என்று...
வேதனை இருந்தும் நன்றி கூற விரும்புகிறேன் என் கண்மணிகளை காட்டும் காணொளி செயலிக்கு ( video call app )
என்றும் உங்கள் நினைவுகளோடு நான்..
- வெளிநாட்டு கணவன்