பெண்ணிலா நீ

கண்ணெதிரே தோன்றி கணப் பொழுதில்
மறைந்து விடும் மின்னலா நீ....

கண்டபடி உரித்து கடித்து கனுகனுவாய்
ருசிக்க விரும்பும் கன்னலா நீ...

வேனிற்கால வேப்பமரத்தடி நிழலில் என்
வெற்றுடம்பில் வீசும் தென்றலா நீ....

கோவக்கார புருசன் மீதும் கொள்ளை அன்பு
காட்டும் குளிர் வெண்ணிலா நீ...

மொத்தத்தில் நான்...
கண்ணிலா காதல் கொண்டு எண்ணிலா
கவிதை எழுத வைத்த பெண்ணிலா நீ....

எழுதியவர் : ஜெய் ரெட்டி (23-Dec-18, 11:57 am)
சேர்த்தது : ஜெய் ரெட்டி
பார்வை : 461

சிறந்த கவிதைகள்

மேலே