சிறந்த காதல் கவிதை

💚💚💚💚💚💚💚💚💚💚💚

*காதல் கவிதை*


*கவிஞர் கவிதை ரசிகன்*

✴✴✴✴✴✴✴✴✴✴✴

பெண்ணே!
ஆற்றை படைத்த இறைவன்
அதற்கென்று
கடலையும் படைத்தான்

காற்றைப் படைத்த இறைவன்
அதற்கென்று
காற்று பைகளையும் படைத்தான்

பசியை படைத்த இறைவன்
அதற்கென்று
பயிர்களையும் படைத்தான்

பூமியை படைத்த இறைவன்
அதற்கென்று
மனிதர்களையும் படைத்தான்

சுமையை படைத்த இறைவன்
அதற்கென்று
தோள்களையும் படைத்தான்

என்னை படைத்த இறைவன்
எனக்கென்று
உன்னை படைக்காதது ஏன்?

இது
இறைவன் குற்றமா?
என் படைப்பின் குற்றமா?
நான்
உன்னை பார்த்தது குற்றமா?
நீ
என்னை ஏற்காதது குற்றமா?
யார் குற்றம் செய்திருந்தாலும்
அதற்கான தண்டனையை
அனுபவிப்பது
நான் மட்டுமே....!!!

✴✴✴✴✴✴✴✴✴✴✴

எழுதியவர் : கவிஞர் கவிதை ரசிகன் (23-Dec-18, 12:24 pm)
பார்வை : 60

மேலே