பூக்களே

பூக்களே கொஞ்சம் சிறகை விரிங்களேன்
வானம் பொழியும் முத்துமழைப் போல
புன்னகை மழையை என்னுள் பொழிந்துவிட்டாள்
சாயம் போகும் பௌர்னமியைப் போல
என்மனதின் இடைவெளி குறைய வைத்தாய்
பூவின் சிறகே...காற்றின் இதழே...
ஒரு கனம் கேளுங்கள்
என்மனம் என்னிடம் இல்லை
பாய்மர படகாய் போகிறது
கடற்கரை அலையாய் தேய்கிறது
நாட்களும் ஓடிட பருவங்கள் மாறிட
பூலோகம் எங்கெங்கும் பனிமலையாகிறது
உன் முகங்களும் நினைவிலில்லை
நினைக்காமலும் இருக்க முடியவில்லை
குளிர்நடுங்க நிற்கிறேன்-உன்
உடலில் இருக்கும் இளஞ்சூட்டை
பாதி எனக்கு தருவாய் என!
காவிரி கரைகளை கண்ணிற்குள் பதித்தாய்
காதலென்ற பிறையினை என்னிரவில் ஒழித்தாய்!
நில்லாமல் போகும் நிலவே-பல
வண்ணங்கள் சூடும் அழகே!
தேய்மானம் கிடையாதோ உனக்கு
ஊழலில்லா பார்வையை கொண்டிருக்கிறாய்!
ஆனாலும் மயங்கினேன்
நிற்பதற்கு கூட நிதானமில்லை!
கரம் ஏந்தி கேட்கிறேன்
என்னை விட்டுவிடு -உன்
அழகிற்குள் பூட்டிவைத்து வதைக்காதே!

எழுதியவர் : sahulhameed (23-Dec-18, 2:31 pm)
சேர்த்தது : HSHameed
பார்வை : 95

மேலே