புயலோ மழையோ என் தோழன் உண்டு

தோழா என் இனிய தோழா
புயலோ மழையோ
நீ வெளியே வா

நீ ரசித்து உண்ணும் உணவை
உருவாக்கும் விவசாயிக்கோ
ஒதுங்கக்கூட இடம் இல்லை

நாம் இருவர் பேசிக்கொள்ள கைபேசி உண்டு
ஆனால் மின்சாரம் கூட
இல்லாத நம் மக்கள் அங்குண்டு

தென்னங் கண்ணை நட்டு வச்சி
மனசு நிறைய ஆசைய வச்சி
காலம் முழுவதும் கைகுடுக்கும்னு
கனவு கண்டேனே

ஒருநாள் புயல் அடிச்சி
கனவெல்லாம் கனவா போச்சி
என் ரெண்டு பொண்ணு வாழ்க்கையும்
நின்னு போச்சு

அட கடவுளேனு ஒரு கதறல்
ஒரு பக்கம் மறு பக்கமோ

கைக்குழந்தைய பாத்து பாத்து
கணவு வெற்றிதானு எண்ணி எண்ணி
இருந்தேனே நேத்துஅடிச்ச புயலுல
கூரையெல்லாம் பறந்து போச்சே

பால், தண்ணி வாங்கக்கூட
கையில காசு இல்ல
உணவு எடுத்து வரவங்ககூட
எல்லையிலே தீந்துடுச்சினு திரும்பிடுறாங்க

குழந்தைய மட்டுமாச்சும் காப்பாத்து கடவுளே
இந்த கதறலை குறைக்க வேண்டும்

தோழா நம் நாடு, நம் மக்கள்,
நாம் தான் உதவ வேண்டும்

எல்லையோடு முடிக்காதே நம் பணியை
எல்லையை தாண்டி முழுமை படுத்துவோம்

இப்படிக்கு,
தமிழ்ரசிகன்...

எழுதியவர் : தமிழ்ரசிகன் (24-Dec-18, 11:30 am)
சேர்த்தது : தமிழ் ரசிகன்
பார்வை : 304

மேலே