உற்றுப்பார்க்க

என் கை
பிடித்து

என்னோடு

வளர்ந்த
குணம்,

உற்றுப்
பார்க்க

பெண்மை
ஒத்த
சாயலாய்

பசி என்று
கேட்க
பதைத்தது

தாய்மை

தடுக்கி
விழ
துடித்தது

சகோதரம்

துயர்
தாக்க
அணைத்தது

நட்பு

இதை
எல்லாம்
பார்க்க

ஒன்று
மட்டும்
புரிந்தது

ஆண்
என்பது
ஒருதுளி

பெண்
என்பது
சரிபாதி

என்பது!

எழுதியவர் : நா.சேகர் (24-Dec-18, 9:44 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 473

மேலே