தேடாததும் கிடைத்தது

என்ன
தேடினேன்
ஏது தேடினேன்
எதற்காக
தேடினேன்
தேடினேனா
தெரியாது,
ஆனாலும் நீ
கிடைத்தாய்
என் தேடல்
எது என்று
எனக்குள்
எனக்காக
தேடினாய்
எனக்கது
தெரியவில்லை
உனக்கது
கிடைத்தது
என் தேடல்
முடிந்தது
நான்
தேடாததும்
கிடைத்தது
இன்று உன்
மூலம்
இப்பொழுது
தான்
புரிந்தது
இதைத்தான்
தேடினேன்
என்று!