ஆவின்பால் கன்றினால் கொள்ப கறந்து – நன்னெறி 3

நேரிசை வெண்பா

தங்கட்(கு) உதவிலர்கைத் தாம்ஒன்று கொள்ளினவர்
தங்கட்(கு) உரியவரால் தாம்கொள்க - தங்கநெடும்
குன்றினால் செய்தனைய கொங்கையாய்! ஆவின்பால்
கன்றினால் கொள்ப கறந்து. 3 - நன்னெறி

பொருள்:

தங்கத்தினாலான உயர்ந்த குன்றினால் செய்ததைப் போன்ற அழகிய கொங்கையை உடையவளே!

பசுவின் பால் வேண்டும் என்றால் அதற்குப் பிடித்த அதன் கன்றின் உதவியோடு கறந்து கொள்வது போல், நமக்கு உதவாதவரிடமிருந்து ஒன்றைப் பெற வேண்டுமென்றால், அவர்க்குப் பிடித்தவரின் உதவியால் அதைப் பெற்றிட வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Dec-18, 8:38 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 40

சிறந்த கட்டுரைகள்

மேலே