பெண்ணுரிமை காக்க

திருமணம் தடை பட்டால்
அதிர்ஷ்டகட்டை என்றும்
திருமணம் ஆகாவிட்டால்
முதிர்கன்னி என்றும்
கணவனைப் பிரிந்து வாழ்ந்தால்
வாழாவெட்டி என்றும்
கணவனை இழந்து வாழ்ந்தால்
விதவை என்றும்
குழந்தை இல்லா விட்டால்
மலடி என்றும் பெண்களை
தூற்றுகிறதே இச்சமுதாயம்...
இத்தனை குறையும் உள்ள ஆணை
எப்படி சொல்வாய் சமுதாயமே?
பெண்களை மதிக்காத தேசம்
பெரும்படை திரட்டினாலும்
வல்லரசாக முடியாது.....
பெரியார் வழி செல்வோம்
பெண்ணுரிமை காப்போம்
பெண்களை போற்றுவோம்..