பொழுதுகள்
உறக்கமில்லா
இரவுப் பொழுதுகள்
எனக்கான
மாயப் பொழுதுகள்
இவை
எனக்குள்ளே
எனைப் பார்க்கும்
என்னை மதிப்பிடும்
தருனங்கள் இவை
என் தனிமையைக்
கூறிட்டுப்
பகிர்ந்திடும்
காலங்கள் இவை
என் மௌனங்களை
அசைபோடும்
அடர்ந்த கனவுக்
காலங்கள் இவை
என் ஆன்ம ராகங்களை
உனக்காக
இசைத்திடும்
இனிய இரவுகள் இவை