ஆயிரம் அந்திப் பொழுதுகள் இணைந்து

கவிந்த இமையில் ஒளிர்ந்த
நீல விழிகளில்
ஆயிரம் அந்திப் பொழுதுகள் இணைந்து
ஒரு மௌன ராகம் பாடின !
விரிந்த இதழ்களின் புன்னகையின்
அழகைத் தர முடியாமல்
புத்தகத்தின் கவிதை வரிகள்
தற்கொலை செய்து கொண்டன !

எழுதியவர் : கவின் சாரலன் (27-Dec-18, 6:19 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 58

மேலே