முடிவுரையாக கூடாது நம் சதிராட்டம்

முகவுரை எழுதத்தான்
கொண்டாட்டம்

முடிவுரையாக கூடாது
நம் சதிராட்டம்

அறிவுரை இல்லை
இந்த எழுத்தோட்டம்

அழிந்து போகக்கூடாது
என்ற போராட்டம்

கொஞ்சம் குடித்தபின்
ஏற்படும் தள்ளாட்டம்

நம்மை தள்ளிவிட்டு
உயிரை

குடிக்க நினைக்கும்
வெள்ளோட்டம்.

வேண்டாம் என்று

விலகிநில் ஊரும்
உறவும்

உன்னை பாராட்டும்

வேண்டும் என்று
கைய்யில் எடுக்க

ஊரும் உறவும்
சிரித்து கைத்தட்டும்

உன் வாழ்க்கை
உன் கைய்யில்

ஒப்படைத்து விடாதே
மதுவின் கைய்யில்

ஊரோடு உறவோடு
சேர்ந்து

வாழதான் வாழ்க்கை

மதுவோடு தெருவோடு
வீழ்திருப்பது

என்ன வாழ்கை?

(படம்:WHO நன்றி)

எழுதியவர் : நா.சேகர் (29-Dec-18, 7:07 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 42

மேலே