அவள் அப்படித்தான்

அவள் அப்படித்தான்

தந்தைக்கு,
செல்லப்பிள்ளை அவள்
தனிமைக்கும்
தத்துப்பிள்ளை அவள்

இலட்சியக் கனவுகள் -பல
அவள் நெஞ்சோடு
உறக்கத்திலும் உறங்காத கனவுகள்-சில
அவள் கண்ணோடு...

பிறரை குறை காண முயன்று
தன்னையே தரம் தாழ்த்தும் மனிதர்களில்
அவள் சற்று மாறுபட்டவள்.

அவள் கொள்வதெல்லாம்
பெரிய ஆசை தான்
பேராசை அல்ல,
காண்பதெல்லாம் கனவுகள் தான்
பகல் கனவு அல்ல.

துயரும் ,
துயர் கடந்த இனிமையும்,
தன்னுள்ளே தான் என
உணர்ந்தவள்.

அந்நியர் கண்ணுக்கு
சற்று கர்வம் பிடித்தவள்,
அறிந்தோருக்கோ -அந்த
கர்வம் தான் அவளிடம் பிடித்திருக்கும்...

கேளிர்,
கேளார் பேதமில்லை
பேதம் பார்த்து -அவள் கேண்மை கொள்வதில்லை..

தன் எழுத்துக்களால்
தன் எண்ணம் அறிபவள்
தலை எழுத்துக்கோ
தன் படைப்பாளனை சரணடைபவள்.

எழுதியவர் : பர்வின்.ஹமீட் (30-Dec-18, 4:46 pm)
Tanglish : aval abbadiththan
பார்வை : 1123

மேலே