ஒரு நொடி மரணம் கலைஞன்

ஒரு நொடி மரணம் .
பல நொடி நினைவை .
கண் முன்னே நிறுத்துதே .

கண்ணீரும் உரையாமல் .
உடலெங்கும் வலியாமல் .
மரணம் என்னை கொள்ளுதே .

மண்ணெல்லாம் ஒன்று சேர்ந்து கண்ணீராய் நின்றதென்றேன் என் தந்தையின் மரணம் அன்று .
என் பிள்ளை என்னெதிரே அழுகிறான் நான் என்ன சொல்வேனோ .

இறைவா .
கருணை கொஞ்சம் காட்டு .
இந்த கலைஞன் முகத்தை பார்த்து .
ஏட்டினை எடுத்து நீயும் விதியினை மாற்றி எழுது .

அன்பு தந்தேன் .
மக்கள் கொண்டேன் .
பணமும் பாசமும் நிறைய உண்டேன். திரையில் நின்றேன் .
திறமை பெருத்தேன் .
ஒலியும் ஒளியும் சேர் ரசிக்க கண்டேன் .

மக்களின் பாராட்டு .
என் திறமைக்கு தாலாட்டு .
பல விருதுகள் நான் குவித்து .
அவர்கள் தந்த கைத்தட்டு என் செவிக்கு இசையாய் இருந்ததே .
திரைப்புவியை எனக்கு தந்ததே .

இசைக்கு நடனமாடி .
கைத்தட்டல் குவிந்ததே திரையில் ஓடி .
புதுப்புது கதைகள் .
மாறுபட்ட செயல்கள் .
பலப்பல வேடம் .
நான் செய்தேனே நாடகம் .

பலரின் அன்பால் நான் சிகரத்தை தொட்டேன் .
சிலரின் அம்பால் நான் படுக்கையில் படுத்தேன் .

மரணம் .
என்னை வா வா என்று கூப்பிடுதே .
மரணம் .
நீ வாழ்ந்தது போதும் என்று சொல்கிறதே .

என் உயிர் பிரிந்தாலும் .
நான் திரையில் வாழ்வேன் .
நெருப்பால் எரிந்தாலும் .
பலர் நெஞ்சில் வாழ்வேன் .

வருகிறேன் .

எழுதியவர் : M. Santhakumar . (30-Dec-18, 4:15 pm)
சேர்த்தது : Santhakumar
பார்வை : 78

மேலே