காதல் சிட்டே சற்று பாட்டை நிறுத்து என்றாள்
பூங்குயில் பாடிய தேனிசையில்
தேன்சிந்தும் மலர்கள் மயங்கி விழிமூடின !
தோட்டத்தில் மலர் பறிக்க வந்த அவள்
மொட்டாய் மீண்டும் மூடிக் கிடந்த மலர்களைக் கண்டாள் !
எப்படிப் பறிப்பேன் எப்படி நான் சூடுவேன்
காதல் சிட்டே சற்று பாட்டை நிறுத்து என்றாள்
பாட்டை நிறுத்தி குயில் சிறகை விரித்து வானில் பறந்தது
மயங்கிய மொட்டுக்கள் விரிந்து மலர்ந்தன நூறாய் !