பயிர்த்தொழில் பழகு

ஒரு வேளை பசிதாங்களாம் ஒரு நாள் கூட பசிதாங்களாம் - ஆனால்
மூன்று நாள் உண்ணாமல் இருக்க முடியாது
ஒரு அரிசியை உருவாக்கவே ஓவ்வொரு நிமிடமும் உழைக்க வேண்டும்
அதன் அருமை தெரியாதவர்கள் தான் அனாவசியமாய் உண்ணாமல் குப்பையில் கொட்டுகிறார்கள்
நெற்கனிகளை உருவாக்கும் நெஞ்சத்திற்கல்லவா தெரியும் அதன் வலி
காசு கொடுத்தால் எதையும் வாங்கலாம் என்று நினைப்பவர்களுக்கு எப்படி தெரியும்
உலகிற்க்கே உணவளிக்கும் உழவுத்தொழிலை செய்ய இன்று ஒருவரும் விரும்புவதில்லை
பயிர்தொழில் இல்லையெனில் நாம் பசியாற எங்கே போவது
படித்து பட்டம் வாங்கியிருந்தாலும் பரவாயில்லை
பட்டதாரிகளே வேலைதேடி அலைவதற்கு பதில் விவசாயம் செய்யுங்கள்
அங்கே நீங்கள் தான் முதலாளி நீங்கள் தான் தொழிலாளி - அதுமட்டுமல்ல
அனைவருக்கும் உணவளித்து அடுத்தொரு கடவுளாய் நீங்கள் அகிலத்தில் வாழலாம்!!!

எழுதியவர் : M.Chermalatha (31-Dec-18, 5:36 pm)
சேர்த்தது : M Chermalatha
பார்வை : 374

மேலே