ஊரழிந்த புயலில் வேரறுந்த நீதி

ஊரழிந்த புயலில் வேரறுந்த நீதி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கார்காலம் தொடங்கும் காலம்
வாடிக்கிடந்த கழனி மறையும் காலம்
அத்தனை துன்பம் மறையும் காலம்
வந்தான் வருணபகவான்..!

ஊர் முழுக்க கொண்டாட்டத்தில்
கழனில் விவசாயி
நீர் கண்ட கணநேரத்தில்
கஜா அரசன் கடிந்து கொண்டான்..!

யார் அவன் ?
வந்த நொடியில்
வந்ததையும் போனதையும்
வளத்தையும் வாழ்க்கையும்
வாரி சென்றான்...

விவசாயிகள் போராட்டத்தில்
நம்மாழ்வாரின் மூச்சோடு
நாமும் நின்றோம்...

கஜா அரக்கனின்
கரிசனமில்லா பார்வையில்
கரியாகி நின்றோம்...

நீதியும் தராமல்...
நிதியும் தராமல்...
நிழல் தேடும் நேரத்தில்...
நித்திரையும் தொலைத்தோம்...

அரசாங்கம் அளித்த அரக்கனோ?
ஆட்சி அனுப்பிய புயலோ ?
ஆள்ந்த நாட்டை அடிமையாக்க ஊரழித்த புயலில்
வேரறுத்த நீதியில்
நிஜம் தேடி அலைந்தோம்....

~லாவண்யா

எழுதியவர் : லாவண்யா (31-Dec-18, 8:50 pm)
சேர்த்தது : லாவண்யா
பார்வை : 147

மேலே