புத்தாண்டு வாழ்த்துகள்

உனக்குள்
ஒளிந்து கிடக்கும்
திறமைப் பெட்டகத்தை
வெளிக் கொணர்.

உனக்குள்
முடங்கிக் கிடக்கும்
அறிவொளிச் சிறகை
ஆனந்தமாய் விரித்து பற.

உனது அக விளக்கு
உலக அகல் விளக்கு.
அதைக் கொண்டு
இருளை விலக்கு.

வெற்றிப் பூ
விரைவாய்
விரிவாய்ப் பூக்கட்டும்.

உன் விரலசைவில்
விடியல் விடியட்டும்.

வாழ்க பல்லாண்டு
வளர்க புகழ் நீண்டு
வாழ்த்துகள் புத்தாண்டு.

எழுதியவர் : srk2581 (31-Dec-18, 9:16 pm)
சேர்த்தது : srk2581
பார்வை : 7023

மேலே