மௌனத்தில் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றாள்

காதோரத்தில் நீ சூடிய மலர்
கவிதையா இல்லை ஓவியமா
அல்லது இரண்டும் கலந்த கொலாஜ் ஆ ?
எடுத்து மீண்டும் சூடிப் பார்க்கிறேன் என்றேன்
எதற்கு என்றாள் ?
மலர்க் கவிதை ஒன்றை அழகிய கூந்தலில்
எழுதிய திருப்தி கிடைக்கும் என்றேன்
சூடு என்று ஓவியமாய் குனிந்தாள்
மலரை எடுத்து கருங் கூந்தலில் சூட்டினேன்
கவிதை எழுதி முடிந்துவிட்டதா என்றாள்
ஆரம்ப வரிதான் எழுதியிருக்கிறேன் என்றேன்
அடுத்த வரிகள் ???? என்றாள்
நீ நிமிர்ந்து புன்னகைத்தால் என்றேன்
நிமிர்ந்தால் புன்னகைத்தாள்
இதழ் குவித்து சப்தமின்றி மௌனத்தில்
புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றாள்
வருடமும் வரிகளும் வண்ணத்தில் மலர்ந்தன !

எழுதியவர் : கவின் சாரலன் (31-Dec-18, 10:44 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 145

மேலே