உயர்ந்தது

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...!

பேசத்தெரிந்த மிருகம் மனிதன்,
இப்போது
அதிகம் பேசியே
அசல் மிருகமாகிவிட்டான்..

பேச்சு அதிகமாகி
அதுவே நோயாகி,
செயல் செத்துவிடுகிறது-
சென்றுவிடுகிறது நிம்மதி..

ஆன்றோர்
அன்றே சொன்னார்-
பேச்சு என்பது
வெறும் வெள்ளிதான்,
மௌனம் என்பது
உலகத்தில் உயர்ந்த
உலோகத்தில் உயர்ந்த
தங்கம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (1-Jan-19, 7:59 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : uyarnthathu
பார்வை : 132

மேலே