புத்தாண்டு வாழ்த்துக்கள்
கடந்து போன வாழ்க்கை பற்றி
கவலை படுவது அழகில்லை
எதிர் வரும் வாழ்க்கை பற்றி
பயப்படுவதும் அழகில்லை
முகத்தையே மறைத்தாலும்
தென்றலாய் உதவிடு
உருவமே இல்லை என்றாலும்
அன்பினை கொடித்திடு
இன்பங்கள் வானவில்
துன்பங்கள் மேகங்கள்
இருப்பினும் நகர்ந்திடு
இருளையும் கடந்திடு
புதுவருடம் புது புத்தகம்
எழுதுவது உன் கைவசம்
வெற்றிகள் நம்வசம்
தோழா வெற்றிகள் நம் வசம்
-ராஜேஷ்