கண்ணைப்பார் சிரி
"கண்ணைப்பார் சிரி"
============================================ருத்ரா
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
என்றன
உன் கண்கள்!
என் நெஞ்க்குள்
நீ இருந்து கொண்டு
அதையும் கேட்டிருப்பாய்!
காலம்
எல்லோரையும் முட்டாள் ஆக்கும்
விளையாட்டு இது.
அதையும் கூட முட்டாள் ஆக்குவதே
நம் காதல்.
நம் கண்களின் சிமிட்டல் தோறும்
நேனோ செகண்டுகள்
அனிச்ச மலர்களாய்
மெல்லிதாய் சொல்லிக்கொள்ளுமே
ஹேப்பியஸ்ட் நியூயெஸ்ட் லவ்
என்று!
"கண்ணைப்பார் சிரி"
இது காலத்துக்கு நாம் வைக்கும்
போர்டு.
=============================================