ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

இருள் விலக
அருள் பெருக ...

இடர் மறைய
சுடர் ஒளிர...

தோல்விகள் தொலைந்து போக
வெற்றிகள் வேட்டையாட ...

கசப்புகள் கரைந்து போக
இனிப்புகள் அணைத்துக் கொள்ள ...

வலிகள் வலுவிழக்க
வலிமைகள் வலுப்பெற...

சோகங்கள் சோர்ந்து போக
நம்பிக்கைகள் கை கொடுக்க ...

குழப்பங்கள் குழம்பி போக
திருப்பங்கள் திரும்பி வர...

போராட்டங்கள் முடிவடைய
புது நீரோட்டம் பாய்ந்திட ...

நடந்தவை தொலைந்தவையாக
நடப்பவை புது துவக்கமாக...

இழந்தவை இழந்தவையாக
இருப்பவை இன்பமயமாக...

வேற்றுமையை விட்டொழித்து
ஒற்றுமையை கையிலெடுத்து
அன்பெனும் பேராயுதம் ஏந்தி
அகிலம் யாவும்
அமைதியாகவும்
நம்பிக்கையுடனும்
மகிழ்வுடனும்
எல்லா வளமும் பெற்று
நல்வாழ்க்கை வாழ
பிறக்கும் இப்புத்தாண்டு
புதிய விடியலாய் அமைய வேண்டும் ...

எழுதியவர் : குணா (1-Jan-19, 11:08 am)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 79

மேலே