அந்நிய மகளுக்கு பிறந்தநாள்
அந்நிய மகளுக்கு
பிறந்தநாள் இன்று
அன்று கால் ஊன்றியவள்
அகலவில்லை இன்னும்
புது கலாச்சாரத்தை
புகுத்தியவள்
மொழிக்கலப்பு இவளின்
இணைபிரியா ஆயுதம்
பாரம்பரியத்தை
பந்தாடியவள்
எங்களின்
தமிழ் மாதங்களை
மறக்க செய்தவள்
கிராமத்து கிளிகளுக்கும்
கிள்ளை மொழியானவள்
நாங்கள் வந்தாரை
வாழ வைப்பவர்கள்
அல்லவா
உன்னையும் வாழ வைத்தே
உறவாக்கிக் கொண்டோம்
உன்னை வரவேற்கிறோம்
வான வேடிக்கையோடு
கருவிழி மூடாமல்
ஏனோ எங்களின்
தமிழ் புத்தாண்டு மட்டும்
மறந்து போனது
எம்மின மக்களுக்கு???!!!