2018 க்கு நன்றி

கடைசியில் நீங்கள்
தள்ளப்பட்டு யாருமற்ற
நாளொன்றின் துளையில் வைத்து
மூடப்பட்டிருக்கலாம்.
மறைக்கப்பட்ட ஸூர்யோதத்தில்
உங்கள் நிழலும்
திருடப்பட்டிருக்கலாம்.
சபிக்கப்பட்ட நாக்குகள்
உங்கள் விடைகளை
உண்டிருக்கலாம்.
பறவைகள் உங்கள்
கிளை தவிர்த்து பறந்திருக்கும்.
அச்சத்தின் வெறித்த பார்வையில்
உங்கள் தாழ்வாரம் மண்ணால்
மூடப்பட்டிருக்கலாம்.
நட்பின் கூரான நகங்களில்
உங்கள் கனவுகள் குருதி கசிய
பிறாண்டப்பட்டிருக்கலாம்.
நம்பிக்கைகள் கேவி அழுதிருக்கும்.
துடைத்தெறிந்த வாசனையில்
உங்கள் பூக்களும்
சிதிலமுற்று உதிர்ந்திருக்கலாம்.
இவையெல்லாம் முடிந்த
இந்த கடைசியில்தான்
நாளையதினம்
உங்களின் புது நாளின்
முதல் நாளாகிறது...
2019...வாழ்க வளமுடன்...

எழுதியவர் : ஸ்பரிசன் (31-Dec-18, 11:33 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 79

மேலே