புத்தாண்டு வாழ்த்துக்கள்

மரத்தின் இலைகள்
ஒவ்வொன்றாய்

உதிர்வதைப் போல
நாட்கள் உதிர

நாட்காட்டியின் கடைசி
நாளும்

இன்று கிழிபட்டு விட்டது

நாளைக் காட்டிக்
கொண்டிருந்த அட்டை
நிரிவாணமாய்

கடந்து போன நாட்கள்
பலவும்
ரகசியங்களை தன்னுள்
புதைத்தபடி

கவிதையின் வரிகளாய்
சிலது
கல்லறை சோகங்களாய்
சிலது
சிலது மட்டும் செய்தியாய்
நம் கருத்துக்கு

ஒரு சிலது வரலாறாய்

அரசியல் முதல் ஆணவக்
கொலைவரை
சிலது புலம்பல்களாய்
சிலது போராட்டமாய்

ஒரு சிலதை காண
சகியாது
இயற்கை தன் பங்குக்கு
சீறிய

பதிவையும் சேர்த்து
வரிசையான நிகழ்வுகளை
பட்டியலிட்டு சுருட்டி
தன் பைய்யில்
சொருகிக் கொண்டு

2019 க்கு வழிவிட்டு
2018 விடை
பெற்றுக்கொண்டது

2019 மௌனசிரிப்போடு
நானும் தயார் என்று
தன் ஆட்டத்தை
தொடங்கியது
கொண்டாட்டதோடு..,

இனிய புத்தாண்டு
வாழ்த்துக்கள்

எழுதியவர் : நா.சேகர் (31-Dec-18, 11:00 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 217

மேலே