2019 வருகவே

புத்தாண்டே வருக புதுமையைத் தருக/
இல்லாமை நலிக இல்லங்கள் நிறைக/
இன்னல்கள் ஒழிக இன்பமே தங்குக/
இளையோர் உயர்க இளமையே பொலிக/
மூத்தோர் சிறக்க முதுமையை மதிக்க/
இயற்கை தழைக்க செயற்கை அழிக/
நல்லாட்சி மலர்க நல்லோர் ஆள்க/
உழவரே தழைக்க வயலே விளைக/
நீர்வளமே செழிக்க வான்மழையே பொழிக/
நல்லாண்டாய் வருக நன்மையெலாம் தருக.

எழுதியவர் : லட்சுமி (31-Dec-18, 9:43 pm)
பார்வை : 4139

மேலே