வாய்க்கரிசி
![](https://eluthu.com/images/loading.gif)
வாய்க்கரிசி
ஓடாய்த் தான் தேஞ்சுப் போச்சு
எம்பொழப்பு.
மிச்சம் மீதியும் கழியும்வரை
கழி தானே கதி.
நட்டாத்துலே ஏனோ விட்டதுங்க
பெத்த புள்ளைங்க.
ஆனாலும் அதுங்கள விடவும்
கிழவியாலே முடியல.
காடெல்லாம் பொத்தலாய்ப்
போச்சு.
புல்லு முளைக்காத பூமியில்
ஆட்டை மாட்டை பூட்டி
வைக்கவும் வக்கில்ல.
கடன் கொடுத்தவனுக்கு
தாக்கு சொல்லவும் முடியாம
தூர தேசம் பொறப்பட்டோம்.
இல்லாட்டி
சொச்ச சொத்தையும்
காரும் பஸ்ஸும் போக
ரோடு போட
புடுங்கிடுமாம்
அரசாங்கம்.
ஊரு திங்க சோறு போட்டோம்.
இன்னைக்கு ஊருகிட்ட
கையேந்தும் நெலைமை...
வரக்கூடாதுங்க
வெவசாயிங்க யாருக்கும்.
யார் யாரோ வராங்க
போறாங்க.
எங்க நெலைமை
இன்னமும் மாறலையே
சாமி.
கண்ணுன்னு வளர்த்தப்
புள்ளைங்க
எப்படித் தான்
வாழப் போகுதுங்களோ.
மூச்சு முட்டும் போது
போட
வாய்க்கரிசிக்கும் நாதியில்லாத
புள்ளைங்க ஆயிடுச்சே...
நனைச்சாலே மூச்சு முட்டுதே.
- சாமி எழிலன்