திசை திரும்பாதிருக்க வேண்டும்

கடவுளைக் காணும் கண்களுக்கு கோவில்கள் தெரியாது.
எம்மையாளும் ஆதியே!
அருட்பெருஞ்சோதியே!
நீ எங்கும் நிறைந்திருக்க முட்டாள்களின் கூட்டம் நிறைகிறது கோவிலில் பாரு!

உழைத்தவன் ஒரு வேளை சோற்றுக்குக் கஷ்டப்பட கற்சிலைகளுக்கு தங்கத்திலே ஆபரணம்!
எல்லாம் படைத்தவன் பெயரில் பிச்சை எடுக்கும் பெருங்கூட்டம்!
இறைவனைக் காண அகக்கண் இருளை நீக்கு என்று அன்படியார்களின் பாட்டு!
கேட்காத தலைகளிலே தங்கியுள்ளது பேரிருட்டு!

பந்தியில் முந்தும் கூட்டமடா!
அது பாயசத்திற்கு பறக்கும் கூட்டமடா!
விதியென்று சதி செய்யும்!
சட்ட நுணுக்கங்களாலே நம்மை குழப்பும்!

கடவுளுக்கும் தீர்ப்பு சொல்லும் நீதிமன்றமே!
அந்தக் கடவுளை கொண்டு வந்து கூண்டிலே நிறுத்துவாயோ?
குடம் குடமாக பால் ஊற்றுவாயோ?

சேதியொன்று சொல்கிறேன் கேள்.
வாய்வழி உலாவிய வேதங்கள்,
வாய்வழி உலாவிய சட்டங்கள்
இரண்டுமே குழப்பமானவை.
நீதியைக் காண உன்வழி ஞானம் தேடு.

உன்னில் விவசாயம் செய்,
கண்ணில் ஒளி பெறுவாய்,
அகக்கண்ணில் ஒளி பெறுவாய்.
அகக்கண்ணில் ஒளி பெற்றால் உன் கடந்த கால செயல்களை எண்ணி வெட்கப்படுவாய்.
அது அவ்வளவு சுலபமல்ல.
அதுவரை நீ திசை திருப்பப்படாமல் பொறுமையாக கவனமாக செயல்படுவாயாக...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (2-Jan-19, 10:32 pm)
பார்வை : 1655

மேலே