ஆதி முனி
கிராமத்தில் வேடிக்கை பேசித்திரியும் நண்பர்கள், அதில் முனியப்பனுக்கு ஒரு பிரச்சனை இருந்தது, அவனுடைய தாத்தாவின் வீட்டை சிலர் ஏமாற்றி அதில் இருந்து வந்தனர். அந்த வீட்டை மீட்க அவனுடைய நண்பர்களிடத்தில் யோசனை கேட்டான், அதில் ஒருவன் ஒரு வினோதமான யோசனை கூறினான், அதன்படி நண்பர்கள் நான்கு பேரும், அன்று நாடு இரவில் ஊருக்கு வெளியேயுள்ள சுடுகாட்டுக்கு சென்றனர்.
அங்கே இரண்டுநாளைக்கு முன்னாள் தூக்கிட்டு இறந்த ஒரு பெண்ணின் உடலை தோண்டி எடுத்தனர், அந்த உடலை யாருக்கும் தெரியாமல் அவர்கள் தூக்கி சென்று முனியப்பனின் தாத்தாவீட்டுக்குள்ளே ஒரு மரத்தில் கட்டி தொங்கவிட்டனர், பிணம் பயங்கரமாக தொங்குவதை பார்த்து நண்பர்கள் அனைவரும் கேலிசெய்து சிரித்தனர், அதில் ஒருவன் பங்காளி இன்னைக்கு இத பார்த்து ஓடுறவங்க இனி இந்த ஓரு பக்கம் வரக்கூடாது என்று சொல்லி சிரித்து, ஒரு மறைவான இடத்தில சென்று பதுங்கி கொண்டனர்,
சிறிது நேரத்தில் அனைவரும் தூங்கிவிட்டனர், இவர்களது செயலை கண்ட அந்த வீட்டுக்காரன் ஒருவன், அந்த வீட்டுக்காரர்களிடம் சொன்னான், அந்த வீட்டுக்காரர்களுக்கு அந்த பிணத்தை பார்க்க பயமாக இருந்ததால், பக்கத்துக்கு ஊரில் உள்ள பெரிய சாமியாடி ஒருவரை அழைத்து வந்தனர். அந்த சாமி யாடி அந்த வீட்டு வாசலை தொட்டவுடன், இது வெறும் பிணம் இல்லை பெரிய தீய சக்தி இங்கே உலாவுதுனு சொன்னார்.
பின்னர் சில சாமி பெயர்களை சொல்லி அவரின் சீடர்களுடன் பூஜை செய்த படியே உள்ளே வந்தார், பிணம் தொங்கிய மரத்தில் இப்போது பிணம் இல்லை சாமியாடி உடனே அந்த வீட்டில் இருந்தவர்களை வெளியே போக சொன்னார், அப்போது பெரிய சூழல் காற்று சுற்றிஅடித்து அனைவரையும் தூக்கி வீசியது.
சாமியாடி என்னநடக்குறது என்பதை திரும்பி பார்த்தார் அப்போது அவர் கண் எதிரே அந்த பிணம் அந்தரத்தில் நின்றுகொண்டு ஏளனச்சிரிப்பு சிரித்தது, சாமியாடி திருநீறை எடுக்கும்முன்பு அவரை அந்தரத்தில் பறக்கவிட்டது
வெளியே இவ்வளவு பிரச்சனை நடந்தும் நண்பர்கள் நன்றாக தூங்கினார் முனியப்பனுக்கு மட்டும் முழிப்பு வந்து கண்ணை கசக்கிகொண்டே வெளியே எட்டிப்பார்த்தான். அவன் பார்க்கும் போது அந்த பிணம் அந்தரத்தில் பறந்தபடியே சாமியாடியின் தொண்டையையை கடித்து ரத்தத்தை குடித்துக்கொண்டிருந்தது, இதைக்கண்ட முனியப்பன் விக்கித்தான், அவனறியாமல் அவனது உடம்பு சிலிர்த்ததால் அருகிலிருந்த மரக்கிளை கீழே சரிந்து சத்தம் கேட்டது.
இதை பார்த்துவிட்ட பேயூட்டப்பட்ட பிணம் அவனை நெருங்கி அவன் கழுத்தை பிடித்து தூக்கியது, முனியப்பன் பயந்து பிணத்தை பார்க்காமல் அவனது இடது புறம் பார்த்தான் அங்கே அவனது நிழலும் பிணத்தின் நிழலும் அந்தரத்தில் தொங்க, பிணம் அவன் கழுத்தில் இருந்த ஒரு கயிற்றை அத்து எரிந்தது, அந்த கயிற்றை அத்ததும், முனியப்பன் ஓலமிட்டு அவன் வாயிலிருந்து எதோ கக்கினான், அந்த தண்ணி பட்டு, பேய் எரிந்து கருகியது, அப்போது அங்கே ஒரு பெருவெளிச்சம் தோன்றியது, ஆதிமுனி அந்தரத்தில் நின்றுகொண்டிருந்தது...