மாற வேண்டிவைகள்
மாற்றம் என்பது நமது மனதினில் வேண்டும்-வாழ்வில்
ஏற்றம் என்பது நம் எதிரியைப் பொறுத்து
சுதந்திரம் என்பது சுயமாய் செயல்பட - நாட்டின்
தலைவரின் செயலால் சகலமும் மாறும்
வரி பல பெருகின் பெருங்குற்றங்கள் பெருகும்
வளமில்லா நிலத்தால் வன் பிழை தோன்றும் - மக்கள்
உழைப்பு குறையின் நம் உரிமைகள் அழியும் - அரசு
களவு மீது பயணப்பின் நாட்டில் கலவரம் தோன்றும்
சட்டத்தை காப்போர் சகல பந்தத்தை துறத்தல் நன்று
அளவில்லா ஆசையில் பயணிப்பவன் - ஒரு நாள்
அதனடிமை ஆவான் பின் கடன்பட்டு வீழ்வான்
ஆளை மூழ்கடிக்கும் போதை - தம்
அகத்தையே அழிக்கும்; அனைத்தையும் சிதைக்கும்
- - நன்னாடன்