நினைவுகள் மறப்பதற்கு இல்லை...
துருப்பிடித்து
துவண்டுச் செல்லும் நகரப் பேருந்தில்
இரும்புச் சட்டங்களுக்கு
இடையில் பாயும்
வழுவிழந்த சாளரத்தின்
இடைவெட்டிய கண்ணாடியின்
விரிசல்களின் வழியே
கோட்பாடற்றுப் பாய்ந்தோடும்
உணர்ச்சியற்ற காற்றில் ஊடுருவி
கண்களை கலங்க வைத்த மாசுத் துகள்கள்...
சிலநேரங்களில்
அவளை மட்டும் நினைவூட்டுகிறது...