அவளைப் போலவே

யோசித்து பார்க்க
வரிசையான
நிகழ்வுகள் கண்
முன்னே நிழலாட
ஒவ்வொன்றிற்கும்
நான்
வினையாற்ற
வந்தது வினை
மனநல மருத்துவ
சிகிச்சைக்கு
நான்,அங்கேயுமது
தொடர
மருந்தெனக்கு
பரிந்துரைக்க
அது ஆற்றும்
வினையெனை
மயக்க
அந்த மயக்கத்திலும்
கண்முன் காட்சி
விரிய
போதுமடி என்னை
விட்டுவிடு என
கதற
கைகால்கள் கட்டப்பட்டு
கட்டிலிலே
பாவம் பயந்து
விட்டனர்
மருத்துவமனை
சிப்பந்திகள்
என் பயம் எனக்கு
என் செய்ய
இப்பொழுதும் காட்சி
விரிகிறது
அது தொடர்கிறது
அவளை போலவே
மருத்துவமும் என்னை
கைவிட்டது