என் வலியின் வரிகள்
இது கவிதை வரிகள் அல்ல
என் வலியின் வரிகள்!!!
வார்த்தைகள் இல்லாத
என் முதல் கவிதை அவள்..
என் வாழ்க்கையை விட்டு
பறந்து சென்ற கவிதையும் அவள்..
இனம் புரியாத உணர்வு அவள்!
என் மனம் அறியாத நிலவு அவள்!
அவளில் என் உயிரை தொலைத்தேன்..
என்னில் அவள் உருவம்
பதித்தேன்..
பார்க்கும் இடமெல்லாம்
அவள் முகம்
அருகில் சென்றால்
கானல் நீராய் மறைந்திடும்!
வாழ்கிறேன் அவளோடு
என் கனவு உலகத்தில்..
கேட்கிறேன் அளவோடு
அவள் குரல் என் இதயத்தில்..
உறங்காமல் அவளை எண்ணி தவிக்கிறேன்..
உறங்கினாலும் அவள் பெயர் சொல்லி பிழைக்கிறேன்..
காதல் யுத்தத்தில்
நான் தோற்றதால்
என் கனவு உலகை
ஆக்கிரமித்துக் கொண்டாள்!!!
இரக்கமற்றவள்
அவள் நினைவுகளை கொண்டு
என் இரவுகளை
கட்டி வைத்து
சித்திரவதை செய்கிறாள்!!!
எப்பொழுது என்னை விடுவிப்பாளோ?
அவள் நினைவுகளிடமிருந்து விடுதலையை எதிர்பார்பவனாக,
❤சேக் உதுமான்❤