காதல்
உந்தன் பார்வை ஒன்றே போதும் என்று
நான் காத்துக்கிடக்க, நீயோ உன் நிழல்
கூட என்மீது படாதவாறு இன்று சென்றுவிட்டாய்
திங்கள் முகம் காணா அல்லிபோல் வாடுகின்றேனே நான்
வானில் வலம் வரும் அந்த திங்களை நான் இதோ
காண்கின்றேன் அதன் குளிர் காய்ந்து அதோ
தூரத்திலிருந்து கண் சிமிட்டும் தாரகைகள்
என் துயர்கண்டு கண்ணீர் விடுகின்றன , நீயோ
மனம் இறங்காது உன் பார்வையைத் தர மறுத்து
சென்றுவிட்டாய் நான் இன்று உன்மீது காதல்
கொள்ள இயலாது என்ற சொல் கேட்டு தாளாது
இதில் என் தவறு ஏதும் இல்லையே என் தலைவா
சற்று யோசிப்பாயா , நாளை வந்து என்னை அணைத்து
என்னவனே என்னை உன்னவளாய் ஏற்றுக்கொள்வாயா