காத்திருத்தல்
உனக்கான ஒன்றை
அறியும் வேட்கை - உன்னில்
அடங்காத வரையில்
காத்திருத்தல் என்பது
தேடல் போன்றது..!!
கடக்கவேண்டிய தூரத்தை
கண்முன் கண்டபின்பும்
காலத்தின் வரவிற்காக
காத்திருத்தல் என்பது
தியானம் போன்றது..!!
வாழ்வின் அர்த்தத்தை
தேடும் பயணத்தில்
பலமுக மனிதர்களைக் கண்டும்
கடக்க இயலாத நொடியில்
காத்திருத்தல் என்பது
கனமானது..!!
பல மாற்றங்களையும்
ஏற்ற இறக்கங்களையும் கொண்ட
இவ்வாழ்வின் மதிப்பை
உணரவைப்பது - காத்திருத்தல்
ஏனொனில்...
காத்திருத்தல் அழகானது..