காவியத்தில் விதி

கோவலன் தன் மனைவி கண்ணகி தந்த
மாணிக்க கற்கள் கொண்ட சிலம்பை
மாமதுரையில் விற்று வரும் தானத்தில்
கண்ணகியுடன் சேர்ந்துவாழ எண்ண
அவனறியான் அந்த சிலம்பில் -மன்னனின்
பொற்கொல்லன் ரூபத்தில் விதி இறங்கி
அவனை திருடனாக்கி இமைப்பொழுதில்
மன்னன் மதியையும் இழக்க செய்ட்து
தர்மம் தேவையா நீதி வழங்கிட செய்தது
கோவலன் வாழ்வையும் முடிந்ததே விதி
இது சதியா, விதியா இல்லை விதி செய்த சதியா
இப்படி விதி இருந்தால் யாதான்
அதன் பிடியிலிருந்து மீள்வார்
இது சிலப்பதிகார காவியம் காட்டி சென்ற
பாடம் வாழ்க்கையில் விதி பாடம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (11-Jan-19, 3:21 pm)
Tanglish : kaaviyaththil vidhi
பார்வை : 51

மேலே