கால் உடைந்த பொம்மை

குப்பை பொறுக்கி
குடும்பம் நடத்துபவன்
கொண்டுவந்த கால் உடைந்த
பொம்மைக்கு எனக்கு உனக்கென்று
கட்டி புரண்டு போட்டி…
மூன்று வயது மூத்தவளுக்கும்
இரண்டு வயது இளையவளுக்கும்...
“பொம்மையை உடைத்தால்
குப்பையில் போட்டிடுவேன்”
கடிந்து கொண்டாள் பெண்டாட்டி...
உடைந்து போனான் கணவன்!!!

எழுதியவர் : சிவா. அமுதன் (11-Jan-19, 9:52 pm)
சேர்த்தது : சிவா அமுதன்
பார்வை : 116

மேலே