கல்லறைக் கண்ணாடி

நிலவரைக்குள் மறைத்து வைத்த காதல் நினைவுகளை.....
கல்லறைக்குள் புதைக்க போகிறேன் காதல் பொக்கிஷமாய்..... கவிதையாய்.

என்னை பற்றி நீயும் உன்னை பற்றி நானும் நினைவில் நினைத்து வாழ்கிறோம்....... ஆனால்......
நேரில் பார்த்தால் வெறுப்பது போல நெருப்பில் வேகிரோம்.......
சுரங்கம் தேடி தோண்ட காதல் புதையல் கிடைத்தது....
புதையலை திறந்து பார்த்தால் பூக்கள் இருந்தது.....
பூக்களை தொட்டு பார்த்தேன் பூகம்பம் வந்தது......
பூகம்ப விரிசலில் விலகி சென்றாய்....
ஏனடி என் உயிரைக் கொன்றாய்.....

மாடத்தில் வைத்த கண்ணாடி கீழ் விழுந்து உடைகிறது.....
உன் தொலைபேசி அழைப்பால்.

சிதறியக் கண்ணாடி துண்டுகளில் என் கண்ணீர்.......
கையில் எடுத்தேன் காயம் பட்டது காதல் இதயத்தில்......
நிலச்சரிவில் உன் நினைவுச் சரிவு....


ஓ என் அத்மாவே....ஒரு நாள் நாம் நிச்சயம் சேர்வோம்.....
காதல் கல்லறையின் பூமியின் குழி அறையில் ......
அழகை பார்க்கும் கண்ணாடி அறையை நினைத்து பார்ப்போம்... கல்லறையில்.....


#தீனா

எழுதியவர் : தீனா (12-Jan-19, 4:10 pm)
சேர்த்தது : தீனா
Tanglish : kallarai kannadi
பார்வை : 587

பிரபலமான விளையாட்டுகள்

மேலே