அவங்க வந்திடுவாங்க

"அய்யோ"
என்று அலரிய மனைவியை போர்வை விளக்கி முதன் முறை கண் விழிக்கும் பறவை குஞ்சு போல் அவன் பார்க்க,
"அலாரம் அடிச்சு இரண்டு மணிநேரமாச்சு அப்படியென்ன தூக்கமோ, ஒரு பொருப்பும் இல்லாம வளர்த்துருக்காங்க உங்களை"அலாரம் அடிச்சப்ப என்னையாவது எழிப்பிருக்கலாம் என்று தன் போர்வை விளக்கி,

"ஏங்க இன்னும் ஒரு 10 நிமிஷம் கழிச்சி எழுந்து கீழே வந்துடுங்க...அவங்க வர இன்னும் 15 நிமிசம் தான் இருக்கு, வீட்டில் போட்டது போட்டாப்பல இருக்கு, எல்லா வேலையும் ஒருத்தியே பன்னனும் இந்த. வீட்டில,எங்க வேலையை அரம்பிச்சு எங்க முடிக்கப்போறனோ" என்று பரப்பரப்புடன் இறங்கி சென்ற மனைவியை,

விடுமுறை நாளான இன்றேனும் சேர்ந்து தூங்கிட விருப்பம் கொண்டு மீண்டும் கனவுலகில் கரைந்து போக...

5 நிமிடத்தில் மீண்டும் "அய்யோ...நாசமாப்போச்சு" நினைச்சேன் நீங்க இப்படி பன்னுவீங்கனு "சொல்லி போர்வை உருவி..இன்னும் 3 நிமிஷம் தான் இருக்கு அவங்க வர..நான் எல்லா வேலையும் முடிச்சிட்டேன் நீங்க இந்த பெட்டு தலைகாணி மட்டும் மடிச்சி வைங்க அப்போதான் வீடு நீட்டா இருக்கும், அவங்க வந்துப்பார்த்தா"

மசமசனு நிக்காதிங்க, அவங்க வர இன்னும் ஒரு நிமிஷம் தான் இருக்கு, கீழேப் போய் கதவ திறந்து விடுங்க என்று சொன்ன மனைவியின் வார்த்தைக் கேட்டு கீழே இறங்கும் பொழுது, கதவு மணி அடிக்க.....

"சீக்கரமா கதவ திறங்க அவங்க வந்துட்டாங்க.. ஒரு தடவை வீடு நீட்டா இருக்கானு பார்த்துத்துட்டு திறங்க அவங்கப் பார்க்கிறப்ப வீடு நீட்டா இருக்கனும்" மறுபடியும் மனைவியின் செல்லக் குரல்..

ஓரு வழியாக கதவைத் திறந்தான் ரகு..

"அக்கா இல்லையானா" என்று சிரித்து நின்றாள்.."அவங்க "எனும் எங்கள் வீட்டு "வேலைக்காரி"

எழுதியவர் : ரகுஸ்ரீ (12-Jan-19, 6:48 pm)
சேர்த்தது : ரகுஸ்ரீ
பார்வை : 141
மேலே