பாசுமதின்னு பேரு வைடா
பாட்டிம்மா எம் பொண்ணுக்கு பேரு வைக்கணும். நீங்க தான் பகல் முழுக்க சலிக்காம தொலைக் காட்சி ரசிகையா இருக்கிறீங்க. உங்க கொள்ளுப் பேத்தி பொறந்து ஒரு வாரம் ஆகுது. அவளோட பிறப்பைப் பதிவு செய்யணும். அவுளுக்கு நீங்களே ஒரு நல்ல இந்திப் பேராச் சொல்லுங்க.
@@@
எங் கொள்ளுப் பேத்திக்கு 'பாசுமதி' -ன்னு பேரு வைடா பேரா பொன்னையா.
@@@@
'பாசுமதி' வடக்க வெளையற நெல்லுப் பேராச்சே.
@@@
அது எனக்குத் தெரியும்டா பேரா. அர்த்தம் தெரியாத அர்த்தம் இல்லாத பேரை எல்லாம் சனங்க அவுங்க புள்ளைங்களுக்கு வைக்கிறாங்க. பக்கத்து ஊட்டுக்காரன் பேத்தி பேரு பானுமதி. எதிரூட்டுக்காரன் பேத்தி பேரு வசுமதி. உம் பொண்ணுப் பேரு பாசுமதி. வைடா அந்தப் பேர.
@##
உங்க பேச்சை மீறமுடியாது பாட்டிம்மா.
எம் பொண்ணுப் பேரு 'பாசுமதி, பாசுமதி, பாசுமதி'. போதுமா?
@@@
போதும்டா பொன்னையா. போடா நகராட்சிக்கு. நிக்காத ஓடுடா.